சிட்னி டெஸ்ட் போட்டி: 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 103/2

சனிக்கிழமை, 9 ஜனவரி 2021      விளையாட்டு
India-Australia 2021 01 09

Source: provided

சிட்னி : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் 131 ரன்னும், லபுஷேன் 91 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் கில் 50 ரன்னிலும், ரோகித் சர்மா 26 ரன்னிலும் ஆட்டம் இழந் தனர். புஜாரா 9 ரன்னிலும், ரகானே 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 242 ரன்கள் பின்தங்கிய நிலை கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய 10-வது ஓவரில் 3-வது விக்கெட் ஜோடி பிரிந்தது. கடந்த டெஸ்டில் சதம் அடித்த கேப்டன் ரகானே நேற்று 22 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவர் கம்மின்ஸ் பந்தில் போல்டு ஆனார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 117 ரன்னாக இருந்தது. 4-வது விக் கெட்டுக்கு புஜாராவுடன் விகாரி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை. ஸ்கோர் 142 ஆக இருந்தபோது விகாரி ரன் அவுட் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து ரிஷப்பண்ட் களம் வந்தார். 5-வது ஜோடி நிதானமாக ஆடியது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 42 ரன்னிலும், ரிஷப் பண்ட் 29 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடை வேளைக்கு பிறகு 80-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. பொறுப்புடன் விளையாடிய புஜாரா 50 ரன்னை தொட்டார். 174 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அவர் அரை சதம் அடித்தார். 80-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 26-வது அரை சதமாகும்.

இந்த ஜோடியை ஹாசல்வுட் பிரித்தார். ரிஷப்பண்ட் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 195 ஆக இருந்தது.

அதன்பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. புஜாரா 50 ரன்னிலும், அஸ்வின் 10 ரன்னிலும், சைனி 4 ரன்னிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

இதில் அஸ்வினும், பும்ராவும் ரன் அவுட் ஆனார்கள். 216 ரன்னில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் இருந்த ஜடேஜா முடிந்த அளவுக்கு போராடி ரன்களை எடுத்தார்.

கடைசி விக்கெட்டான முகமது சிராஜ் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 100.4 ஓவர்களில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 94 ரன்கள் குறைவாகும்.

ஜடேஜா 37 பந்தில் 28 ரன்கள் (5 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கம்மின்ஸ் 29 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹாசல்வுட் 2 விக்கெட்டும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்திய வீரர்களில் 3 பேர் ரன் அவுட் ஆனார்கள்.

94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களான வார்னர் 13 ரன்னிலும் புகோவ்ஸ்கி 10 ரன்னிலும் வெளியேறினர். அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுமித் மற்றும் லபுசேன் பொறுப்புடம் விளையாடினர்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. சுமித் 29 ரன்னிலும் லபுசேன் 47 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து