முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.16.25 கோடி அதிக பட்ச தொகைக்கு ஏலம் போன ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது.கொரோனா சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 போ் இந்தியா்கள்; 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள்.292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். 

8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளன. 

அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆரம்பத்தில் இருந்தே தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிசுக்கு ஏலத்தில் செல்வாக்கு இருந்தது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவே ஐ.பி.எல்லில் அதிக பட்சமான ஏலத்தொகையாகும். 

இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் 

  • கிறிஸ் மோரிஸ்: 16.25 crs, ராஜஸ்தான் ராயல் -2021 * 
  • யுவராஜ் சிங்: ரூ.16 கோடி டெல்லி அணி - 2015 
  • பாட் கம்மின்ஸ்: ரூ.15.5 கோடி கொல்கத்தா நைட் ரைடர் - 2020 
  • பென் ஸ்டோக்ஸ்: ரூ. 14.5 கோடி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் - 2017 
  • க்ளென் மேக்ஸ்வெல்: ரூ. 14.25 கோடி, ராயல் சேலன்ஞ்ஜர் பெங்களூர் - 2021 
  • ஐ.பி.எல்லில் கிறிஸ் மோரிஸ்: 
  • பேட்டிங் சராசரி: 170.1 
  • பந்துவீச்சு சூழல். வீதம்: 8.44

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து