பவானிபூர் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பிரியங்கா தெப்ரிவால் இன்று மனுத் தாக்கல்

Priyanka-Debriwal 2021 09 1

Source: provided

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பவானிபூர் இடைத் தேர்தலில் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து களமிறங்கும் பா.ஜ.க. வேட்பாளர் பிரியங்கா தெப்ரிவால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். 

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ்கட்சி அறிவித்து விட்டது. பா.ஜ.க. சார்பி்ல் பிரியங்கா தெப்ரிவால் களமிறக்கப்பட்டுள்ளார், அவர் இன்று முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். 

பா.ஜ.க. வேட்பாளர் பிரியங்கா தெப்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், 

இந்த மாநில மக்கள் வாழ்வதற்கு உரிமை பெற்றுள்ளார்கள், ஆனால், முதல்வர் மம்தாவும், அவரின் கட்சியும் உரிமைகளைப்பறிக்க முயல்கிறார்கள். நான் எனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறேன். வங்காள மக்களுக்காக போராடுவேன். ஆளும்கட்சி வன்முறையில் நம்பிக்கையுள்ளதால், தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படாது. நான் ஆளும் கட்சிக்காக போராட உள்ளேன் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான நியாயத்தையும் வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து