முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் ;அமெரிக்காவில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்ற சரத் பூஜை நடத்தினர். 

இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் . சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும்.  நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.

நான்காவது நாளில் சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் படைப்பார்கள். மூங்கில் சிம்புகள் பின்னப்பட்ட தட்டு அல்லது முறத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து படைப்பார்கள். சன்னமான அரிசி மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்த்தை படைத்து உண்பார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சாத் விரத பூஜை கடந்த புதன் கிழமை நடைபெற்றது. அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்கள் பலரும் நேற்று முன்தினம் சாத் விரத பூஜையில் பங்கேற்றனர். அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள தாம்சன் பார்க்கில் திரண்ட வடஇந்திய பெண்கள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சாத் விரத பூஜை நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை வட அமெரிக்காவில் உள்ள பீகார்- ஜார்க்கண்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து