முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. டெல்லியில் 10,179 டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் 2,390 இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 3-வது அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகாரித்து வருகிறது. டெல்லியில் நேற்று புதிதாக மேலும் 22,751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,179 பேர் குணமடைந்துள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை 14,63,837 பேர் குணமடைந்துள்ளனர் நிலையில். 60,733 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றைய பாசிட்டிவ் சதவீதம் 23.53 ஆகும்.

கேரளாவில் நேற்று 6,238 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,390 பேர் குணமடைந்துள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கேரளாவில் 49,591 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34,902 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 12 ஆயிரத்து 895 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,808 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 6,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து