முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களுக்கான 4 மற்றும் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க.

செவ்வாய்க்கிழமை, 1 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 4 மற்றும் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்கவுள்ளது.  வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 4 மற்றும் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய நகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை, பல்லடம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தாம்பரம், கோயம்புத்தூர்,  கரூர் , திருநெல்வேலி  மாநகராட்சிகளில் மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை,  திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வாலாஜாபேட்டை, சோளிங்கர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், கரூர் மாவட்டம் குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பழனி,  கொடைக்கானல், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு, தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய நகராட்சிகளில் மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!