முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2022      உலகம்
Sri-Lanka-2022-05-01

Source: provided

கொழும்பு : இலங்கையில் பாணந்துறை, பேருவளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் நேற்று முற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பேருவளை - மொரகல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகல்ல - மருதானை வீதியூடாக சிறிய ரக லாரியில் பயணித்த நபர் மீது, துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இளநீர் கொண்டு சென்ற ஒருவர் மீதே, இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, பாணந்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை - நிர்மல மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களினால், இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

இந்த இருவேறு துப்பாக்கி பிரயோகங்களும் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து