முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு : செப். 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Cong 2022 08-24

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் தேர்தலை அக்டோபர் 17-ம் தேதி நடத்துவது என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டது. 

அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை செப்டம்பர் 22-ல் வெளியாகும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்குகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளகும். காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 17 -ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து