முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2022      இந்தியா
Punjab 2022-11-04

Source: provided

அமிர்தசரஸ்: கோவில் அருகே கட்சி நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்தியபோது பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக  போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. 

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து குண்டு காயத்துடன மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சூரி உயிரிழந்ததாக அமிர்தசரஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து