முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர் காங்கிரசில் இணைந்தார்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      இந்தியா      அரசியல்
Jainarayan 2022-11-28

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. அரசில் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் இணைந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர்.

இதற்கிடையே, குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார். அடுத்த மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து