முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரும்பன் விமர்சனம்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா
Iron-Review 2023 03 12

Source: provided

நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா மீது காதல் கொள்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தத்தா துறவி ஆவதென முடிவு செய்து ஜெயின் மடத்தில் சேர்ந்துவிடுகிறார். அவர் துறவியாவதை விரும்பாத ஜுனியர் எம்.ஜி.ஆர் அவரை மடத்தில் இருந்து கடத்த திட்டமிட, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘இரும்பன் படத்தின் திரைக்கதை. படத்தின் நாயகன் ஜூனியர் எம்ஜிஆர் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளிக்கிறார். சில இடங்களில் யோகிபாபு, சென்ராயன் இருவரும் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். ஜூனியர் எம்ஜிஆர் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி தன்னை யார் என நிரூபித்து இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தா அழகு பொம்மையாய் வந்து நடிப்பிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். கடல் மற்றும் புயல் காட்சிகளை அழகாக  ஒளிப்பதிவு செய்த லெனின் பாலாஜிக்கு பாராட்டுக்கள். காதலுடன் ஒரு அட்வென்ச்சர் த்ரில்லர் படமாக கொடுப்பதற்கு முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கீரா. மொத்தத்தில் பாடல்கள், சண்டை மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிக்கவும் வைக்கிறான் இந்த இரும்பன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து