முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் செல்ல தடை பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தம்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Bus

Source: provided

பெங்களூரு:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக வாகனங்கள் கர்நாடகத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக கடந்த 26-ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரில் நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊர்வலம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பந்த் என்ற பெயரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் பந்த் நடத்துபவர்களே பொறுப்பு என்றும் அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் இன்று பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போராட்ட முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும் படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். 

இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்க மாட்டோம். தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறி விட்டது. 

தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?. இன்று ( 29-ம் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே, இன்று கர்நாடகாவில் பந்த் நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பெங்களூரு செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் இரு மாநில எல்லை பகுதியில் சூழ்நிலையை பொறுத்து பேருந்து சேவை தொடரும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து