முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணியினை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி  சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்  

இவ்விபத்தில் உயிரிழந்த ஜெயபால்மூர்த்தியின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடியாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந்தத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து