முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
Mahadevan 2024-05-22

சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கங்காபூர்வாலா இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். 

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த 2023 ஏப்ரல் 19-ம் தேதி மும்பை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்தது. 

இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி, கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 28-ம் தேதி தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஓராண்டு பணியாற்றிய கங்காபூர்வாலா இன்று 23-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை ஆர்.மகாதேவன் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து