முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம்: சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு ரூ.5 அபராதம் செலுத்த உத்தரவு

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
National-Green 1

Source: provided

புதுடெல்லி : கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். சார்பில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாயில் 2023-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. 

இதன் காரணமாக கச்சா எண்ணெய் வெளியேறி கடல்நீரில் கலந்ததால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. எண்ணெய் கசிவால் மீனவர்களும் சுற்றுச்சூழலும் பாதித்த நிலையில், தாமாக முன்வந்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டது. 

தீர்ப்பாயம் சார்பில் மீன்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றை கொண்ட 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு சுமார் 10 டன் கச்சா எண்ணெய் கடலில் இருந்து அகற்றப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படவில்லை எனவும் தீர்ப்பாயத்தில் அந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனிடையே வழக்கு விசாரணையின் போது, எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. வழக்கை முடிக்க வேண்டும் என  சி.பி.சி.எல். தரப்பு வாதிட்டது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் எண்ணெய் கசிவு தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எனவே சி.பி.சி.எல் நிறுவனம் மீது நடவடிக்கை தேவை என்றும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதமாக செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து