முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் காம்பீர்? - தேர்வு செய்வதில் தடுமாறும் பி.சி.சி.ஐ.

புதன்கிழமை, 22 மே 2024      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

மும்பை : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.

மே 27-ல் முடிவு...

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ.) சவாலானதாக மாறியுள்ளது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு வரும் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பதவிக்கு கௌதம் காம்பீர் (கேகேஆர் அணியின் பயிற்சியாளர்), ஸ்டீபன் ஃப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ( மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவர்) ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

சரிபார்க்கும் பணி... 

அனைவரும் அதிக லாபம் அளிக்கும் ஐபிஎல் தொடர் சம்பந்தமான வேலைகளில் பிசியாக உள்ளதால் அடுத்த 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்கக்கூடிய வலுவான ஒரு பயிற்சியாளரை பி.சி.சி.ஐ. தேடி வருகிறது. ஐபிஎல் வேலையில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மட்டுமே. லக்ஷ்மண் பயிற்சியாளர் பணியை ஏற்க தயக்கம் காட்டிவருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுடன் பேசவும், அவர்கள் வேலையில் ஆர்வமாக உள்ளனரா எனச் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

முதலிடத்தில்....

பி.சி.சி.ஐ.யின் விருப்பப்பட்டியலில் காம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மூத்த வீரர்களும் கம்பீரும் சமீப காலமாக நன்றாகப் பழகி வருவதாகத் தெரிகிறது. கேகேஆர் அணியுடன் அகமதாபாத்தில் உள்ள கம்பீருடன் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசியாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து