முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா - பாக்., இன்று மோதல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      விளையாட்டு
18-Ram-51

Source: provided

தம்புல்லா: இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் இன்று முதல் தொடங்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 2-வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்தியா ஏ பிரிவில்...

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 26 ந் தேதி வரை இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், நேபாளம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.

2 ஆட்டங்கள்... 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இன்றைய தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோது கின்றன. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

14 போட்டிகளில்...

இரு அணிகளும் இதுவரை 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 11 போட்டியிலும் பாகிஸ்தான் 3 போட்டியிலும் வென்றுள்ளன. இந்திய அணியின் ஆதிக்கம் இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து