முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரட்டல் வழக்கில் நடராஜன் மீண்டும் கைது

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

தஞ்சை. ஏப்.22 - தஞ்சை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நடராஜன் கொலை மிரட்டல் புகாரில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். சசிகலாவின் கணவர் நடராஜன் மீது நிலஅபகரிப்பு உள்பட 6 வழக்குகள் பாய்ந்துள்ளன. இதில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரெங்கராஜன் என்பவர் தந்த புகாரின் பேரில் பதியப்பட்டது. விளாரில் உள்ள தனது 22 சென்ட் நிலத்தை நடராஜனும், அவரது சகோதரர் சாமிநாதனும் சேர்ந்து ஆக்கிரமித்து அங்கிருந்த மரங்களை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றியதாகவும், இதற்கு நியாயம் கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ரெங்கராஜன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக தஞ்சை 2வது nullநீதிமன்றத்தில் நடராஜன் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். இதற்காக திருச்சி மத்திய சிறையிலிருந்த அவரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது ரெங்கராஜன் புகாரின் பேரில் நடராஜனை போலீசார் கைது செய்தனர். 

நடராஜன் மீதுபாய்ந்துள்ள 6 வழக்குகளில் 3 வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு நடராஜன் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago