முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் - பெடரர் 4-வது சுற்றுக்கு தகுதி

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 3 -  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3 -வது சுற்றில் ஜோகோவிக், ரோஜர் பெடரர் ஆகியோர் வெற்றி பெற்று 4 - வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளனர்.  இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டி ன் தலைநகரான பாரிசில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் விஈராங்க னைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 3- வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிக்கோல்சுடன் மோதினார். 

3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் செர்பிய வீரரான ஜோகோவிக் அபார மாக ஆடி, 6 - 1, 6 - 2, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரரை தோற்க டித்து 4 -வது சுற்றுக்குள் நுழைந்தார். 

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தொ டர்ந்து அவர் பெற்ற 24 -வது வெற்றி யாகும் இது. தொடர்ந்து 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பிய வீரர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் பெறும் ஆர்வத்தில் உள்ளார். 

மற்றொரு 3 - வது சுற்று ஆட்டம் ஒன் றில், சுவிட்சர்லாந்தின் முன்னணி வீர ரான ரோஜர் பெடரர், பிரான்ஸ் வீரரு டன் பலப்பரிட்சை நடத்தினார். 

இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த வீரரான பெடரர் சிறப்பாக ஆடி, 6- 3, 4 - 6, 6- 2, 7 - 5 என்ற செட் கணக்கில் வெ ற்றி பெற்றார். பெடரர் 4-வது சுற்றில் பெல்ஜியம் வீரர் கோபினை சந்திக்கிறார். 

மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் டிசோன்கா (5 -ம் நிலை வீரர்), செக். குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்,சுவிஸ் வீரர் வாவெர்னிகா, அர்ஜென்டினா வீரர் டெல்பெட்ரோ ஆகியோர் வெற் றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறினர். 

உலகின் முதல் நிலை வீராங்கனையா  ன விக்டோரியா அசரென்கா 3- வது சுற்று ஆட்டம் ஒன்றில், கனடா நாட்டைச் சேர்ந்த வெஸ்னிக்குடன் மோதி னார். 

இந்த ஆட்டத்தில் அனுபவமிக்க பெ லாரஸ் வீராங்கனை சிறப்பாக ஆடி, 6- 4, 6- 4 என்ற நேர் செட் கணக்கில், கனடா வீராங்கனையை தோற்கடித்து 4- வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்