பழனி முருகனுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலி

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, ஜூன். - 7 - பழனி முருகன் மலைக்கோயில் முருகப் பெருமானுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை சிருங்கேரி ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள் காணிக்கையாக வழங்கினார்.  பழனி முருகன் மலைக்கோவிலுக்கு சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள் வருகை புரிந்தார். பின்பு அவர் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பழனி முருகப் பெருமானுக்கு 108 கிராம் எடை கொண்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை அவர் காணிக்கையாக வழங்கினார்.  பின்பு அர்ச்ச ஸ்தானிக மடத்தில் அருளாசி வழங்கினார். இதில் கே.எஸ்.என். வேணுகோபாலு எம்.எல்.ஏ, கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், தொழிலதிபர் ஹரிஹரமுத்து, நியூ திருப்பூர் லாட்ஜ் மகேஷ், ராம்கோ சிமிண்ட் உரிமையாளர் ராமசுப்பிரமணியராஜா, டாக்டர் சங்கர்ராமன், ரமேஷ்குமார் சர்மா, வைத்தியநாத சாஸ்திரி, பாலசுப்பிரமணிய சிவாச்சார்யார், செல்லம் கேண்டீன் ராமநாதன், சங்கராலயம் பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: