முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஒபன் போட்டி: மரியா ஷரபோவா சாம்பியன்

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாரீஸ், ஜூன். - 11 - பிரெஞ்சு ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 10 வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் அவர்.  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதி சுற்றில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர்செட்களில் இத்தாலியின் எர்ரானியை தோற்கடித்தார். தர வரிசையில் 2 வது இடத்தில் இருந்த ஷரபோவா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஷரபோவா 2004 ல் விம்பிள்டனிலும், 2006 ல் அமெரிக்க ஓபனிலும், 2008 ல் ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 10 வது முறையாக பிரெஞ்சு ஓப்பனில் பங்கேற்ற ஷரபோவா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தாலியின் எர்ரானி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வென்ற ஷரபோவாவுக்கு ரூ. 8.6 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. 2 வது இடத்தை பிடித்த சார எர்ரானிக்கு ரூ. 4.3 கோடி கிடைத்துள்ளது. 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago