தொடரும் தீ விபத்து சம்பவங்கள் எதிரொலி: தலைநகரில் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. - 2 - மகராஷ்டிர மாநில தலைநகரான மும்பையில் அரசு தலைமை செயலகத்தில் கடந்த 21 ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமான அரசு ஆவணங்களும் எரிந்து சாம்பலாயின. மேலும் டெல்லியில் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம் போன்ற முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும் நார்த் பிளாக் கட்டிடத்தின் 2 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.  இந்நிலையில் மீண்டும் டெல்லியில் பல முக்கிய மத்திய அரசு அமைச்சகங்கள் உள்ள சாஸ்திரி பவனில் நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில் தொடர்ந்து தீ விபத்து நிகழ்வது பல வகையில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: