திருமலை கோயில் நிர்வாகம் சார்பில் விரைவில் தமிழ் தொலைக்காட்சி

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
tirupati

 

திருப்பதி,ஏப்.- 23 - திருமலை, திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் விரைவில் தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்படும் என சிறப்பு அதிகார குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து குழுவின் தலைவர் சத்தியநாராயணன் கூறியதாவது, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தமிழிலும் வரும் 3 மாதத்திற்குள் தொடங்கப்படும். இத்தொலைக்காட்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும். இதற்காக 2 நேரடி ஒளிபரப்பு வாகனங்கள் வாங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்ரீசேவா திட்டத்துக்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட உள்ளது. இதில் பக்தர்கள் தங்கும் விடுதி, பயணத் திட்டம், தரிசனம் எல்லாவற்றையும் ஒரே டிக்கெட் மூலம் பெறலாம். 

மேலும் கோயிலில் கணக்கு வழக்கு மற்றும் நிர்வாகம் குறித்து அனைத்து பதிவுகளும் ஸ்ரீசேவா மூலம் மேற்கொள்ளப்படும். இதனால் வேலைவாய்ப்புகள் ஏதும் குறையாது. இத்திட்டத்தில் அனைத்து வேலைகளும் ஒப்பந்தக்காரர்களே மேற்கொள்வார்கள். கோயில் நிர்வாகம் மேற்பார்வை மட்டுமே செய்யும். இதற்காக திருப்பதி, திருமலை மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் மையங்கள் செயல்படும். திருப்பதியில் சுமார் 400 பேர் அமர இட வசதி செய்யப்படும். இதில் பக்தர்கள் டோக்கன் பெற்றுக் கொண்டு பின்னர் அழைப்பு வரும் போது தரிசனம் உள்ளிட்ட தேவைகளுக்கான சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: