முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தை ஆளும் சக்தியாக விளங்க வேண்டும்: சீமான்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், ஏப். 23 - தேசிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம் என்றும் கர்நாடகத்தை ஆளும் தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் விளங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெங்களூர் ஸ்ரீராமபுரம் காந்திபள்ளி அருகில் அம்பேத்கார் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் கூறியதாவது, 

ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதை விட ஒரு நொடி மானத்துடன் வாழ வேண்டும் என்று சொன்னவர் அம்பேத்கார். எத்தனையோ மிருகங்கள் இருந்தாலும், புலிதான் மானமுள்ள விலங்கு. அதற்காக தான் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக புலிக்கொடி உள்ளது. தமிழர் இல்லாத கட்சி என்று எதுவும் இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று எந்த கட்சியும் இல்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் திராவிட மொழிதான். தமிழ்நாட்டில் மட்டும் தான் திராவிட கட்சி இருக்கிறது. மற்ற எந்த மாநிலத்திலும் திராவிட கட்சி இல்லை. 12 கோடி உலக தமிழனுக்கு ஒரு அரசியல் கட்சியாக எமது இனம், சரியான கொள்கையுடன் நாம் தமிழர் கட்சி உள்ளது. ஈ்ழ விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி எப்போதும் போராடும். மிகப்பெரிய தேசிய இனம் தமிழ் இனம். தமிழனுக்கு என்று ஒரு தேசம் பிறக்க போகிறது. தமிழர்கள் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். தமிழ் தேசிய விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும். தமிழர்களை பிரிப்பதும், எதிரியும் சாதியும், மதமும் தான். மத்திய காங்கிரஸ் அரசு 100 நாட்கள் வேலை திட்டத்தை தொடங்கி, மக்களை சோம்பேறிகளாக மாற்றி வருகிறார்கள். விவசாய தொழில் செய்ய யாரும் இல்லை. விவசாயத்தை கைவிட்ட நாடுகள் அனைத்தும் பிச்சை எடுத்து வருகிறது. ஏழைகள் இல்லாத நாடு நம்நாடு என்கிறார்கள். ஏழைகள் அனைவரும் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால் ரூ. ஒரு லட்சம் கோடியை சுருட்டி விட்டு காங்கிரஸ் கட்சியினர் பணக்காரர்களாக ஆகிவிட்டனர். தேசிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைத்து கொள்ளமாட்டோம். திரைப்படம் வேறு, அரசியல் வேறு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது. கர்நாடகத்தில் நாம் ஆட்சி செய்ய முடியாது. ஒரு கோடி தமிழர்கள் இருக்கும் போது, கர்நாடகத்தை ஆளும் தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக, அரசியலில் தமிழர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த முறை நமது கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று கூறினார் சீமான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!