முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் வாங்குவதற்காக இந்தியா வரும் பாக். அமைச்சர்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூலை.2 - பாகிஸ்தானின் மின்பற்றாக்குறையை களைவதற்காக இந்தியாவிடம் மின்சார உதவி கேட்டது பாகிஸ்தான். அதற்கு சம்மதம் தெரிவித்தது இந்தியா. ஏற்கனவே, அது குறித்து இருநாடுகளும் செயலில் இறங்கிவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக, பாகிஸ்தான் மின் துறை அமைச்சர் விரைவில் இந்தியா வருவார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தினந்தோறும் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட் வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற நவாஸ் ஷெரீப், தனது முக்கிய நோக்கமே, நாட்டில் மின் பற்றாக்குறையை களைவது தான் என சூழுரைத்தார்.

அதன் முதல் கட்ட முயற்சியாக, இந்தியாவிடம் 500 மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு பாகிஸ்தான் கேட்டது. அதன்படி உயர் அழுத்த மின்பாதை மூலம் பஞ்சாப் மாநிலம் வழியாக லாகூருக்கு மின்சாரம் கொண்டு செல்ல முடிவு செய்த இந்தியா, மேலும் அதன் சாதக, பாதகங்களை ஆராய, இந்தியக்குழு ஒன்றை அங்கு அனுப்பியது.

இந்தியக் குழுவின் வருகையைத் தொடர்ந்து, தற்போது, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் மின்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் இந்தியா வர இருப்பதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago