அதல பாதாளத்தை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!!

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.23  - சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது. 

தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (ஐஐட) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சுமார் 4.6 சதவீதம் சரிவடைந்ததாக வணிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்திற்கு காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த முக்கிய தரவுகள் வரும் ஜூலை 30 ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் வெளியிட்டப்பட உள்ள முதல் காலாண்டு நிதி கொள்கையின் மறு ஆய்வு அறிக்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பணவீக்கத்தை குறைப்பது போன்ற இரு முக்கிய செயல்களுக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் ஒரு கடினமான பணியினை மேற்கொண்டு வருகிறது. 

எனினும், இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்றாக குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை நம்பிக்கை அளிக்கிறது. வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு தங்கம் மற்றும் வெள்ளி போன்ற இதர விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. 

வர்த்தக தரவுகள், ஜூன் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு முந்தைய மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது. 

இந்த மிக முக்கியமான துறைகளின் தரவுகளைப் பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (டஆநுயுஊ) தலைவர் திரு சி ரங்கராஜன், ாகடந்த ஆறு ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உணர முடியும் ... எனவே, நான் தற்பொழுது உள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலை கண்டிப்பாக மேம்படும் என நினைக்கின்றேன்ா, எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்பாட்டின் மிக முக்கிய அம்சமான வட்டி விகிதம் குறைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது, மேலும் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் வேறு கவலை தரத், தக்க விதத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். டபிள்யூபிஐ (றுடஐ) அடிப்படையிலான பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

இந்திய அரசாங்கம் ஐஐபி (ஐஐட) மற்றும் சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட காரணத்தால், பங்குச் சந்தை மற்றும் பணச் சந்தைகளில் இந்தத் தரவுகளின் தாக்கத்தை நம்மால் உடனடியாக உணர முடியவில்லை.

பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 282.41 புள்ளிகள் அதிகரித்து 19,958.47 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த மே 30 க்கு பின்னர் சென்ஸெக்ஸ் சந்தித்த உட்ச பட்ச அளவாகும். அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சுமார் 11 பைசா அதிகரித்து 59.56 என்கிற அளவில் முடிவடைந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வார கால அளவில் இந்திய ரூபாயின் அதிக பட்சமாகும்.

ஐஐபி (ஐஐட) தரவுகளின் படி, மே மாத தொழிற்சாலை உற்பத்தி குறைந்தற்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் மோசமான செயல்பாடே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஐஐபி (ஐஐட) 1.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 2.5 சதவீதமாகவும் இருந்தது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐஐபி (ஐஐட) அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்சாலை வெளியீடு மிகக் குறைந்த அளவாக 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே மாதத்தில் இது சுமார் 0.6 சதவீதமாக இருந்தது. 

குறியீட்டு எண்ணில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கும் உற்பத்தி துறையானது சுமார் 2 சதவீதத்தை தொட்டு விட்டது. கடந்த ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தித் துறையானது சுமார் 2.6 சதவீதம் என்கிற அளவில் இருந்தது.

மே மாதத்தில் சுரங்க துறை உற்பத்தி மிக அதிகமாக சுமார் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி சுமார் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. 

ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையில் உள்ள 22 தொழில் குழுக்களில் சுமார் 11 குழுக்கள் மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளன.

வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வர்த்தக தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தின் அதே பருவத்தை ஒப்பிடுகையில் சுமார் 4.6 சதவீதமாக குறைந்து விட்டது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 23.79 பில்லியன் டாலராக உள்ளது.

நம் நாட்டின் இறக்குமதி அளவு 0.37 சதவீதம், அதாவது 36 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.

இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவே மிக முக்கிய காரணம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (னுபுகுவு) திரு அனுப் புஜாரி தெரிவித்தார். 

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 9.31 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் சில்லறை பணவீக்க விகிதத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் திடீரென்று ஒரு ஏற்றத்தை சந்தித்துள்ளது. 

காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது செங்குத்தாக அதாவது சுமார் 14.55 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 

இது நாட்டின் பொருளாதார மீட்சி மிக அருகில் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது, வளர்ச்சி இன்னும் அதன் அடித்தளத்தை தொடவில்லைா என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: