முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் அமைதியை விரும்பும் இந்தியா: பிரதமர்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 16 - பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் பரஸ்பரம் ஒத்துழைப்பை வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் மன்மோகன்சிங் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அமைதியான நிலையான மற்றும் வளமான பாகிஸ்தானை உருவாக்க தங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் 5 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் இரு நாடுகளுக்கிடையே நட்புறவு பாதிக்கப்படும் நிலை உருவானது. அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்று மன்மோகன்சிங் வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago