முக்கிய செய்திகள்

போபால் விஷவாயு வழக்கு - சி.பி.ஐ. மனு தள்ளுபடி

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
Bhobal

புதுடெல்லி, மே12 - போபால் விஷவாயு தொடர்பான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு செய்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984 ம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விசவாயு கசிவில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். மேலும் ஏராளமானோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அலட்சியம் காட்டியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கூறப்பட்டது. அதில் 8 பேர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும் வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. யும் மத்திய பிரதேச அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. போபால் விஷவாயு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கபாடியா தலைமையிலான 5 பேர் கொம்ட பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மனு தாக்கல் செய்தது ஏன்? என்று சி.பி.ஐ. க்கு கேள்வி எழுப்பயதுடன் நீதிபதிகள் மத்திய பிரதேச அரசும் சி.பி.ஐ யும் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் திருப்திகரமான விளக்கம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: