வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் கனிமொழி ஆஜர்

Kanimozhi7

சென்னை, மே.13 - சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரி முன்பு கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்குமார் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இது பற்றி விபரம் வருமாறு:-​2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 6​ந் தேதி இருவரும் ஆஜர் ஆனார்கள். நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜரானார்கள். இதைத்தொடர்ந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வந்தது எப்படி? அது குறித்து கணக்கு வழக்குகளை பற்றி விசாரணை செய்ய கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு சென்னை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு நேரில் ஆஜராகும்படி கடந்த திங்கள்கிழமையன்று நேட்டீஸ் அனுப்பியது இதைத்தொடர்ந்து நேற்று சென்னையில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு முன்பு ஆஜரானார்கள்.  

நேற்று காலை 11.45 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ராமகிருஷ்ணன் பண்டே முன்பு ஆஜர் ஆனார்கள். அப்போது இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு ஏன் கொடுக்கப்பட்டது. அதுபற்றி முழுவிபரங்கள் குறித்து இருவரிடமும் விசாரித்தனர்.

2007​ம் ஆண்டு டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட போது கனிமொழி காண்பித்த சொத்துக்கணக்கில் கலைஞர் டி.வி. பங்கு குறித்து குறிப்பிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் சம்மனை அனுப்பி இருந்தனர். அதுபற்றி நேற்று விசாரணை நடந்தது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி விளக்கம் அளித்தார். கனிமொழி வரும் தகவல் அறிந்ததும் ஏராளமான வெளி மாநில பத்திரிகையாளர்கள், டி.வி. நிறுவனத்தினர் குவிந்து இருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ