முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 16 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 16 - பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 10 மாதங்களுக்கு முன் சுமார் 51 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இப்போது 67 ரூபாயாக உள்ளது. ஓராண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலையேற்றத்தை விட மிகவும் அதிகமாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு சேவை நோக்குடன் செயல்பட வேண்டுமே தவிர வணிக நோக்குடன் செயல்படக்கூடாது. எனவே பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதனையும் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony