முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-வங்கதேசம் கனவாய் பாதை விரைவில் திறப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ஷில்லாங்,ஜூன்.29 - 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் நாடுகளுக்கிடையே உள்ள ஹாட்ஸ் கனவாய் பாதை விரைவில் திறக்கப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து தற்போது மேகாலாயா மாநிலத்தில் உள்ள பாலத் மற்றும் கலைசியாரில் இருக்கும் காட்ஸ் கனவாய் பாதையில் சர்வதேச அளவில் வர்த்தகம் நடந்து வந்துகொண்டியிருந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் நாடாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த காட்ஸ் கால்வாய் மூடப்பட்டுவிட்டது. இதனால் வர்த்தகமும் நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்க கனவாய் பாதையை திறக்க நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கனவாய் வழிநெடுகிலும் சந்தைகள் மற்றும் கடைகள் கட்டும்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த கனவாய் மீண்டும் திறக்கப்பட்டவுடன் இந்தியா-வங்கதேசம் இடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கனவாய் மேற்குவங்காளத்தில் இருந்தது. மேற்குவங்காளத்தில் இருந்து மேகாலாயா மாநிலம் பிரிந்து சென்றுவிட்டதால் இதில் ஹாட்ஸ் கனவாஸ் பாதையும் சேர்ந்துவிட்டது. வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து வங்கதேச அரசு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago