முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுமொத்த பணவீக்கம் மீண்டும் உயருகிறது

வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 15 - நாட்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டுத்தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முடிய பணவீக்கம் 9.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்கள், தொழிற்சாலை உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதியாகிவிட்டது. கடந்த ஜூலை மாதம் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த விற்பனை விலை குறியீட்டு படி பணவீக்கம் 9.22 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பணவீக்கம் 9.44 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் பணவீக்கம் 9.51 சதவீதமாக உயர்ந்திருந்தது. வருடாந்திர அடிப்படையில் உணவுப்பணவீக்கம் 9.62 சதவீதமாக இருந்தது. வெங்காயம் விலை 45.29 சதவீதமாக உயர்ந்தது. பழங்கள் விலை 22.82 சதவீதமும் உருளைக்கிழங்கு விலை 12.53 சதவீதமும் உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த காய்கறி பணவீக்கம் 11.80 சதவீதமாக உயர்ந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்