முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு அதிபர் முகமத் நசீத் ராஜினாமா

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

மாலி,பிப்.8 - மாலத்தீவு நாட்டில் போலீசாருக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்து வருவதையொட்டி அந்த நாட்டு அதிபர் முகமத் நசீத் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார். இந்துமாக சமுத்திர பகுதியில் உள்ளது மாலத்தீவு. இது ஒரு தீபகற்ப நாடாகும். சார்க் அமைப்பில் மாலத்தீவும் உள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவில் ஒரு பெரிய மருத்துவமனையை இந்தியா கட்டுக்கொடுத்துள்ளது. 

மாலத்தீவில் முதன் முதலாக ஜனநாயக முறையில் முகமத் நசீத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலத்தீவில் ஒரு நீதிபதி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்ததாக தெரிகிறது. போராட்டத்தை அடக்க போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் மேலும் பரவாமல் இருக்க அதிபர் முகமத் நசீத், பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். இவர் ஐ.நா. சபையிலும் பணியாற்றியுள்ளார். மனித உரிமைக்காக போராடி வருபவர். சுற்றுப்புற சூழ்நிலை கெடாமல் பாதுகாப்பதிலும் அரும்பணியாற்றியவர். மாசு அதிகரிப்பதால் பூமி அதிக வெப்பமடைந்து வருகிறது. இதனால் மாலத்தீவு பகுதியில் கடல்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மாலத்தீவு பகுதியில் உள்ள பல தீவுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மாலத்தீவை காப்பாற்ற காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

பதவி விலகியுள்ள முகமத் நசீத் கூறுகையில், மாலத்தீவு மக்களை புண்படுத்த நான் விரும்பவில்லை. நான் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பிரச்சினை அதிகமாகும் என்று கருதுகிறேன். அதனால் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன் என்றார். அதிபர் பொறுப்பை துணை அதிபர் முகமத் வஹீத் ஹாசனிடம் முகமத் நசீத் ஒப்படைத்துவிட்டதாக தெரிகிறது. ஹாசனும் குழந்தைகள் நலன்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் பாடுபட்டவர்.

நசீத் ராஜினாமாவுக்கு ராணுவம் வற்புறுத்தல்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மக்களின் விருப்பப்படிதான் நசீத் ராஜினாமா செய்துள்ளார் என்று ஹாசனின் செயலாளர் அகமத் தாபேக் தெரிவித்தார். 

மாலத்தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது அந்த நாட்டு உள்நாட்டு பிரச்சினை என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago