முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் உலக வங்கி தலைவர் சந்திப்பு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      உலகம்
Image Unavailable


சென்னை, ஜூலை.22 - முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச்செயலகத்தில் உலக வங்கித்தலைவர் டாக்டர் ஜிம்யங்கிம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது உலக வங்கி தலைவரையும், மற்றும் உள்ளோரையும் முதல்வர் ஜெயலலிதா அன்பாக வரவேற்றார்.
இன்பின் உலக வங்கித்தலைவர் டாக்டர் ஜிம்யங்கிமுடன் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். உலக வங்கித்தலைவர் தமிழகத்திற்கு வந்ததை தாம் மகிழ்ச்சியடைவதாகவும், உலக வங்கியின் மேற்பார்வையில் நடைபெறும் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதாகவும் முதல்வர் அவரிடம் விளக்கி கூறினார்.
இந்தியாவில் உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களில் தமிழகம் மிகப்பெரிய அளவிற்கான திட்டங்களில் முன்னோடியாக இருப்பதாக முதல்வர் கூறினார். உலக வங்கியின் திட்டங்களை தமிழகம் மிகவும் திறமையாக செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:_
உலக வங்கியுடன் தமிழக அரசு இணைந்து பணியாற்றும் திட்டங்களில் தமிழகமும் உலகவங்கியும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடியதாக திகழ்கிறது. இந்த முன்னோடி திட்டங்களிலும் புதிய கருத்துக்களில் தமிழகம் செயல்படுத்தி வரும் நடைமுறையிலும், பிற மாநிலங்கள் மற்றும் இந்திய அளவிலான திட்டங்களுக்கு சிறப்பான வழிகாட்டிகளாக அமையும்.
விவசாயத்துறையில் பாசன வசதி திட்டங்களில் நவீன மயம். நீர்ப்பிடிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் புதுவாழ்வு திட்டங்கள் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றுகிறது. இதற்கு உலக வங்கியின் உதவி மறப்பதற்கு இல்லை. உலக வங்கியின் உதவியால்தான் இத்தகைய திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் குறிப்பாக 2004_ல் தமிழகத்தை கலக்கிய சுனாமி பேரலையின்போது உலக வங்கி தமிழகத்திற்கு அளித்த உதவிகளை நாங்கள் மறக்க முடியாது. மேலும் உலக வங்கியின் உதவியுடன் நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத்திட்டம் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டம் 1 மற்றும் 2, தமிழ்நாடு சாலை திட்டம் 1, தமிழ்நாடு சுகாதார திட்டம் ஆகியவற்றால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைந்துள்ளது. இதற்கு உலக வங்கியின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
மேலும் உலக வங்கித்தலைவரின் ஆர்வத்தால் பொது சுகாதாரத்தில் அதன் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நாடு கடற்கரை பேரழிவு குறைப்பு திட்டம் மற்றும் தமிழக அணைகளின் மறுசீரமைப்பு போன்றவைகளில் உலக வங்கியின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்துள்ளது. மேலும் உலக வங்கியின் உதவியினால் தமிழகம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகம் முன்னெடுத்து செயல்கிறது. தமிழ்நாடு தொலைநோக்கி திட்டம் 2023 வெளியிட்டுள்ளோம். இதன்படி தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் வளர்ச்சி அடையும். வரும் 10 ஆண்டுகளில் உயர் மத்திய தர வருவாய் நாடுகளில் தமிழகம் முன்னணியாக திகழும் வாய்ப்பும் உள்ளது.
உலக வங்கியின் உதவியில் சமீபத்தில் மிக முக்கிய திட்டங்களான இம்வாரம் மற்றும் புதுவாழ்வு திட்டம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதோடு புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்திட்டம் 3_ஐ தொடர்நது எதிர்வரும் நகர்புற வளர்ச்சிக்கான 4_வது திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக வங்கியின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தமிழக பொருளாதார வளர்ச்சி மேலும் மேம்பாடு அடையும்.
உலக வங்கியின் நாட்டின் பங்களிப்பு திட்டம் (சி.பி.எஸ்.) இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாகும். இந்தவிஷயங்களில் உலக வங்கியின் நிதி உதவிக்கு தமிழகம் முன்னணியாக திகழும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதற்கு உலக வங்கித்தலைவர் ஜிம்யங்கிம் பதில் அளிக்கும்போது, உலக நிதி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்படுத்துவதை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். அவருடன் இருந்த உலக வங்கி இயக்குனர் ஒன்னோ ரூல் பேசுகையில், தமிழகத்திற்கு நடைபெறும் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றும்,  இதைத்தொடர்ந்து வரும் அனைத்து திட்டங்களும், 12 மாத காலத்திற்குள் நடைபெற்று விடும் என்பதகாவும் தெரிவித்தார், அதோடு தமிழகத்தில் சாலை மேம்பாட்டு வசதி போன்ற கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற உரிய பங்களிப்பு செயலுத்துவது பற்றி மத்திய அரசின் நிதித்துறையுடன் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது ஐ.எப்.சி. இயக்குனர் செர்ஜி திவ்வியக்ஸ், உலக இயக்குனர் டாக்டர் டி.வி.சோமநாதன், சென்னை பகுதியின் மத்திய மேலாளர் சுனில்குமார் ஆகியோர் உடன் ருதனர். தமழக அரசின் சர்பில் தலைமைச்செயலாளர் மோகன்வர்கிஸ் சுங்கத், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் நிதித்துறை பொத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருன்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்