Idhayam Matrimony

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியா - பாக்.,கிற்கு அறிவுரை

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், அக்.10 - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி – மூன் வலியுறுத்த உள்ளார் என்று அவரின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புப் பகுதிகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் சில நாட்களுக்கு முன்பு நடத்திய தாக்குதலில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு எல்லையில் உள்ள 50 இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

இது தொடர்பாக பான் கி – மூனின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்த பிரச்சினையை ராஜாங்க ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் விரைவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி – மூன் வலியுறுத்தவுள்ளார்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago