முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

மழையின் பெயரில் கரன்சி வெளியிடும் நாடு எது தெரியுமா?

ஒவ்வொரு நாட்டு கரன்சிக்கும் அதாவது பணத்துக்கும் ஓர் பெயர் உண்டு. ஆனால் மழையின் பெயரையே கரன்சிக்கு சூட்டிய நாடு எது தெரியுமா... சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடான போஸ்துவானா தான் அது. அந்நாட்டு கரன்சியின் பெயர்  போஸ்துவானன் புலா. அவர்கள் மொழியில் புலா என்றால் மழை. அவர்களின் அடிப்படையான அனைத்து கரன்சிகளிலும் இந்த புலா அதாவது மழை என்ற பெயர் இடம் பெற்றிருக்கும் என்பது ஆச்சரியம் தானே..

ரோபோவுக்கு குடியுரிமை

உலகில் முதன்முறையாக, ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா ‘ஹன்சன் ரோபோடிக்‘ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். பெண் போன்று பேசும் இந்த ரோபோட், கேட்கும் கேள்விக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது. இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த நகரம்

உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

புது முயற்சி

பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்திருக்கிறது. உரிய மாற்றங்களைச் செய்து இதை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறை.

மிகப்பெரிய வைரம்

ரஷ்ய வரலாற்றி‌லேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago