முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரோபோ டீச்சர்

குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளா‌ர்.

வெண்டைக்காய் பயன்கள்

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதை அதிகமாக சாப்பிட்டு வந்தால், புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

புதிய தகவல்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்தத்தை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு

ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.  வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்!  ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்!  பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

வந்து விட்டது தலைமுடிக்கும் மவுசு கேசத்தில் தயார் செய்த ஆடைகள் டிரெண்டிங்

விலங்குகளின் தோல்களையும், ரோமங்களையும் கொண்டு ஆடைகள் தயார் செய்தது பழைய காலம். பின்னர் பருத்தியையும் மரத்திலான நார்களையும் பயன்படுத்தி ஆடைகள் செய்வது தற்காலம். ஆனால் மனித கேசத்தில் நவீன ஆடைகளை தயாரிப்பதுதான் தற்போது நியு டிரெண்டிங்.  ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Zsofia Kollar என்பவர்தான் இந்த புதிய ஐடியாவுக்கு சொந்தக்காரி. தற்போது ஜவுளி உற்பத்தியின் வயிற்றை கலக்கியுள்ள இந்த புதிய ஆடை வடிவமைப்பு பிரபலமாகத் தொடங்கியுள்ளது. மேலும் பசுமை ஆடை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத ஆடை என்ற பெயரில் பல்வேறு ரகங்கள் சந்தையில் குவிந்து வரும் வேளையில் உண்மையிலேயே இது ஒரு மாற்றுதான் என்கிறார் இவர். முடி, அதன் அளவு, நச்சுத்தன்மையற்ற தன்மை, அதிக இழுவிசை வலிமை, வெப்ப இன்சுலேட்டர், நெகிழ்வுத்தன்மை, இலகுரக மற்றும் எண்ணெயை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் காரணமாக, ஜவுளி உற்பத்தி முறைக்கு ஒரு சிறந்த சேர்க்கையாக அமைகிறது என்று ஜவுளித்துறையின் தலையில் தூக்கி கல்லை போடுகிறார். ஜவுளி உற்பத்தியால் ஏற்படும் ரசாயன மாசுபாட்டிலிருந்து விலகி இது முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்கிறார். தற்போது இவரது நவீன ஆடை ரகம் ஜெட் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது.

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மைக்ரோ சாப்டின் ஹோலோ லென்ஸ்

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மைக்ரோ சாப்டின் ஹோலோ லென்ஸ் கண் கண்ணாடிகள் தனது இரண்டாவது எடிசனை வெலியிட்டுள்ளது. நிஜ உலகத்துடன் ஹோலோ கிராம் என்னும் மாய உலகத்தையும் இணை்த்து காட்சிகளையும், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்தின் மூலம் அவற்றின் கேமிங் வசதிகள் மூலமாக பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் இந்த கண் கண்ணாடிகள் உதவும். முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த விந்தையான கண்ணாடிகள் பல்வேறு துறையினருக்கும் டிஜிட்டல் இமேஜ்கள் மூலம் ஒத்திகை பார்ப்பதற்கு மிக சிறந்த கருவியாக அமையும். அதே நேரத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்துடன் கூடிய பொழுது போக்கு சாதனமாகவும் இருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago