முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

kamba ramayanam, தமிழ் நூல்

மாவீரன் நெப்போலியன் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் வைத்திருந்தார். அந்த நூலகத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் நூல் கம்பராமாயணம்.

கவனம் தேவை

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு இதனால் அதிகமாகும்,  மேலும், இது சுகாதாரமானது கிடையாது. பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.

கடலுக்கு அடியில் ஏசு : காணக்கிடைக்காத அற்புதம்

கடலுக்கு அடியில் மிகவும் பிரமாண்டமான ஏசு சிலை உள்ளது. அதை ஆண்டுதோறும் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா..கிறிஸ்ட் ஆஃப் தி அபிஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் நீரில் மூழ்கிய வெண்கலச் சிலை ஆகும், முதலாவது மத்தியதரைக் கடலில், சான் ஃப்ரூட்டூசோவுக்கு அப்பால், இத்தாலிய ரிவியராவில் உள்ள காமோக்லி மற்றும் போர்டோஃபினோவிற்கு இடையே அமைந்துள்ளது. கிறிஸ்துவின் சிலை 25 அடி நீரில் நிற்கிறது. நீட்டிய கைகள் மேற்பரப்பில் இருந்து 10 அடிக்கும் குறைவாக உள்ளது. அங்கு நீங்கள் சிலையை மேற்பரப்பிலிருந்து பார்க்க முடியும் அல்லது சிலையை நெருக்கமாகப் பார்க்க கீழே டைவ் செய்து சென்றும் பார்க்கலாம். உலகின் மிகவும் அரிதான இடங்களில் இந்த கடலுக்கு அடியில் ஏசு சிலையும் ஒன்றாகும் ஏன் கடலுக்கு அடியில் சிலை... பிரபல கடல் மூழ்கி வீரர் Duilio Marcante என்பவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இத்தாலி சிற்பி  Guido Galletti என்பவர் இந்த பிரமாண்ட சிலையை உருவாக்கி கடலுக்கு அடியில் நிறுவினார். கடலில் உயிரிகளுக்கும், கடலில் உயிரிழந்தவர்களுக்கும் நினைவு சின்னமாகவும், கடலின் அடியிலிருந்து ஏசு உலகை காப்பார் என்று கருதியும் இது அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூளையில் பிராசஸர்

மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொறுத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும். கார்டக்ஸ் - எம்.ஒ எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி இந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago