முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஹீலியம் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படும் என்றால் நம்ப முடிகிறதா?

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பலூன்கள் மேலே பறப்பை நாம் பார்த்திருக்கிறோம்.  இதற்கு காரணம் அதில் அடைக்கப்பட்டுள்ள ஹீலியம் வாயுதான். பூமியில் நீண்டகாலமாக ஹீலியம் எப்படி கிடைக்கிறது என விஞ்ஞானிகள் மண்டையை பிய்த்துக் கொண்டனர். சூரியனில் ஏகப்பட்ட ஹீலியம் இருக்கும் போது பின்னர் அதில் கொஞ்சம் மட்டும் எப்படி பூமிக்கு வந்தது. இதற்கான விடை 1894 இல் கிடைத்தது. பூமிக்கு அடியில் யுரேனியம் சோடியம் போன்ற தனிமங்களின் உரசலால் ஹீலியம் உருவாவது கண்டு பிடிக்கப்பட்டது. ஹீலியத்தை திரவ வடிவில் உறைய வைக்க அதிகப்படியான அழுத்தம் தர வேண்டும்.  அப்படியே திரவமாக மாறினாலும் ஒரு கொள்கலனில் வைத்தால் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக பாத்திரத்தின் சுவர் மீது ஏறி செல்வதை பார்ப்பதற்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

அதிகம் உற்பத்தி

உலக கம்பளி உற்பத்தியில் 2 சதவீதம் இந்தியாவில்  உற்பத்தியாகிறது.ராஜஸ்தான், ஜெய்சால்மர் நகரத்தில்தான் இந்தியாவில் கம்பளி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, கோடைகாலத்தில் உடலை வருத்தி எடுக்கும் கடும் வெயிலும், குளிர்காலத்தில்  உடலை துளைத்தெடுக்கும் கடும் பனிக்காற்றும் வீசும்.

இதுதான் காரணம்

மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவர் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானார். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டார். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

சமண படுகைகளைப்போல மலை உச்சியில் பாறைகளை குடைந்து வீடு கட்டி வசிப்பவர்கள்

தென்னிந்தியா முழுவதும் உள்ள எந்த மலைக்கும், குன்றுக்கும் சென்றாலும் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட குடை வரை சிற்பங்களையும், கோயில்களையும், படுக்கைகளையும் காண முடியும். இன்றைக்கும் தொல்லியல் துறையின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி யாராவது மலை உச்சியில் பாறையை குடைந்து குடை வரை குடியிருப்பை அமைப்பார்களா என்றால்... ஆம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் அது நடந்துள்ளது இங்கு அல்ல. இத்தாலியில். அந்நாட்டில் உள்ள Dolomites Mountains என்ற மலையில்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2700 மீட்டர் அதாவது 8 ஆயிரத்து 858 அடி உயரத்தில் பாறையை குடைந்து தன்னந்தனிமையில் ஒருவர் வீட்டை உருவாக்கியுள்ளனர். முதலாம் உலகப் போரின் போது இத்தாலியர்களுக்கும் ஆஸ்திரோ ஹங்கேரியர்களுக்கும் சண்டை வந்த போது அதிலிருந்து தப்ப விரும்பிய சிலர் இது போன்று யாரும் எளிதில் வரமுடியாத இந்த இடத்தில் வீட்டை உருவாக்கினர். தொலைவிலிருந்து பார்க்கும் போது பாறையில் ஒட்டியிருப்பது போல தோன்றும் இந்த வீடு தற்போது பாரம்பரிய சுற்றலா தளத்தில் இடம் பெற்றுள்ளது. மிகவும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கும் செய்தியாக இது உலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடஹஸ்தாசனம்

பாடஹஸ்தாசனத்தை செய்வது மிகவும் எளிது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, கால்கள் நன்கு வலிமை அடையும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால், இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கால்கள் வலுப்பெறுகின்றன.

மலாலா யூசுப்சாய்!

பாகிஸ்தானில் பெண் கல்வி பற்றி பேசிய மலாலா துப்பாகியால் சுடப்பட்டார். தோட்டா இவரது மண்டை ஓட்டில் இருந்து தண்டுவடம் நோக்கி பாய்ந்தது. எனினும் மரணத்தை தொட்டு திரும்பிய அவர் பெண் கல்விக்காக மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்தார் மலாலா. இதற்காக இவர் நோபல் பரிசு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago