முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தின் அடியில் உள்ள நீரை இப்படியும் கண்டுபிடிக்கலாம்

இன்றைய நவீன கால கட்டங்களில் நிலத்தடி நீரை எடுப்பதற்காக போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. அதற்காக நிலத்தடி நீரை கண்டுபிடிக்க நவீன உத்திகளும், பழைய முறைகளும் கையாளப்படுகின்றன. ஆனாலும் தோண்டினால் தண்ணீர் வருவதில்லை... வெறும் காற்றும் மண்ணும் தான் வருகிறது. ஆனால் பண்டைய விவசாய காலங்களில் நிலத்தடி நீரை மிக சுலபமாக நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி...ஒரு விவசாயி கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு புறமும் அடைத்துவிட்டு, பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர் அவற்றை கவனித்தால், அவை மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்துதான் அசை போடுமாம். இவ்வாறு தொடர்ந்து 4, 5 நாட்கள் கூர்மையாக கவனித்தால், அவை ஒரே இடத்தில் தான் படுக்குமாம்.  அந்த இடத்தை தோண்டினால் அற்புதமான குளிர்ந்த நீர் கிடைக்கும்..இயற்கையையே அறிவியலாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களின் அறிவுத் திறன் வியக்கச் செய்கிறது அல்லவா?š

மணல், sand

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா..  கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

கறிவேப்பிலையில் இவ்வளவு இருக்கா?

கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக அதை வடிக்கட்டவும். வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை. சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago