முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரோபோ 'எமிலி'

ரிமோட் மூலம் வேகத்தையும், திசையை கட்டுப்படுத்தக்கூடிய எமிலி என்ற ரோபாட்டிக் லைஃப்கார்டை அமெரிக்க கப்பல் படை உருவாக்கியுள்ளது. நீச்சல் தெரியாதவர்களை காக்க உருவாக்கப்பட்ட எமிலி வேகமாக நீந்தும். 4 அடி நீளமும், 11 கிலோ எடையும் கொண்டது. மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்துமாம்.

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் வினோத கிராமம்

வடகிழக்கு மாநிலத்தின் மிகப்பெரிய மாநிலமான அஸ்ஸாம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த மாநிலத்தின் பல விஷயங்கள் மிகவும் மர்மமானவை. இந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இடம் உள்ளது. டிமா ஹாசோ மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜதிங்கா பள்ளத்தாக்கு பறவைகளின் தற்கொலை ஸ்தலமாக அறியப்பட்டு மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், பறவைகளின் தற்கொலையால் ஜதிங்கா கிராமம் உலகின் வெளிச்சத்திற்கு வருகிறது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, புலம்பெயர்ந்த பறவைகளும் இங்கு வந்து தற்கொலை செய்துகொள்வதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது போன்ற சம்பவம் 1901ம் ஆண்டு முதல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வெளியுலகம் 1957ல்தான் இதுபற்றி அறிந்தது. இந்த சம்பவம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை. 

பெண் மருத்துவர்

தமிழகத்தில் ஆண்கள் மட்டுமே படித்து வந்த மருத்துக்கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மருத்துவ மாணவி என்ற சாதனை படைத்தவர் முத்துலட்சுமி ரெட்டி.சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்க நிதி திரட்டியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

களிமண் வீரர்களின் அணிவரிசை எங்குள்ளது தெரியுமா?

சீனாவில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் 1974 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் தடயம் ஒன்றை கண்டறிந்தனர். அங்கு தோண்டிய போது சுமார் 8 ஆயிரம் களிமண் வீரர்களின் அணிவகுப்பு சிலைகளாக வடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெரகோட்டா ஆர்மி என அழைக்கப்படும் இந்த இடம் சுமார 98 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. கின் வம்சத்தின் முதல் பேரரசரான கின் ஷி ஹூவாங் ஆட்சி காலத்தில் அதாவது சுமார் கிபி 246 இல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது வரை இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் பெரிய விலங்கு நீல திமிங்கலம். பூமியில் வாழும் விலங்குகளில் இவைதான் மிகப் பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. 1909 இல் பிடிபட்ட  பெண் நீல திமிங்கலம் ஒன்றில் நீளம் 100 அடி 17 அங்குலம். அதே போல 1947 இல் வேட்டையாடப்பட்ட மற்றொரு நீல பெண் திமிங்கலத்தின் எடை 190 டன் அதாவது 189,999.865 கிலோ. அதாவது 2500 மனிதர்களுக்கு இணையான எடை என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago