முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஞாபக சக்தி அதிகரிக்க உடனடி வல்லாரை சட்னி

வல்லாரை கீரை நரம்புகளை வலுவாக்கி ஞாபக சக்தியைப் பெருக்கும். இதனை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூடு, மாந்தம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.தேவையானவை: வல்லாரைக்கீரை - அரை கட்டு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சுத்தம் செய்த இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். சுவையான வல்லாரை சட்னி தயார்!

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

மிக அருகில்

மிக பெரிய கிரகமான வியாழன், பூமியில் இருந்து 60 கோடியே 80 லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. கடந்த 3-ம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்த வியாழன் கிரகத்தை நாசா அனுப்பிய அதி நவீன சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் மிக அருகில் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது.

டீசல் என்ஜின் என ஏன் பெயர் வந்தது

ருடால்ஃப் டீசல் பிரான்ஸில் 1858 இல் ஜெர்மனியில் பிறந்தார். பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் இவரது பெற்றோர் குடியேறினர். படிப்பைத் தொடர்வதற்காக டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. இன்ஜின்கள் குறித்து டீசல் ஆராய்ந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார். நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார். 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 ஆவது வயதில் மறைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago