Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவீன டிஜிட்டல் செல்பி ஸ்டிக் அறிமுகம்

இன்றைக்கு செல்போனில் படம் பிடிக்க அனைவரும் செல்பி ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். ஆனால் செல்பி ஸ்டிக்கே படம் எடுக்க பயன்பட்டால்...  இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அடுத்த கட்டமாக 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்கக் கூடிய செல்பி ஸ்டிக்குகள் அறிமுகம் ஆகியுள்ளன. Vecnos IQUI என அறியப்படும் இந்த ஸ்டிக்குகளில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விரும்பிய திசையிலும், 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்க முடியும். இதற்கென சிறப்பு செயலி மற்றும் மென்பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இனி படமெடுக்க செல்போனோ, கேமராவையோ தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. இந்த செல்பி ஸ்டிக் போதும்..

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

பறக்கும் பைக்

ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இது, மின்சாரம் மூலம் இயங்குகிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும்.

பேச முடியாது

குரங்குகளால் மனிதர்கள் போல் பேச முடியுமா? என்ற ஆராய்சியில், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருந்தாலும், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என தெரியவந்துள்ளது.

மேம்பட்ட வசதி

ஜிமெயிலில், இதுவரை 25 எம்பி அளவுடைய ஃபைல்களை மட்டும் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், கூகுள் டிரைவில் சேமித்து அனுப்பலாம். ஆனால் தற்போது, 50 எம்பி அளவுடைய ஃபைல்களை, ஒரு மெயிலில் இருந்து அனுப்பும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாசாவை முந்தும்

நாசாவுக்குத் தேவையான விண்கலங்களைத் தயாரித்து வழங்கி வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 384,400 கிலோ மீட்டர் தூரம் உள்ள சந்திரனுக்கு 2018 -ம் ஆண்டு 2 மனிதர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் கன ராக்கெட் மூலம் அழைத்து செல்கிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago