முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

அதிசய சிறுமி

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற குழந்தை 3 காலுடன் பிறந்தது. இடுப்புடன் இணைந்த 3-வது கால் இருந்ததால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் சோய்டியால் நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சி தரும்

கோபம், வெறுப்பு உணர்ச்சியும்கூட மகிழ்ச்சி தரும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, சீனா, இஸ்ரேல், கானா, போலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2, 300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தாங்கள் விரும்பியதற்கு நிகராக அனுபவிக்கும் உணர்ச்சிகள் இருந்தால் மக்களின் வாழ்க்கை திருப்தியுடன் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

உலக சாதனை

இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.

ரத்தத்தை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு

ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.  வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்!  ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்!  பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

மாரடைப்பிலிருந்து விடுதலை

இருதய பிரச்னைகளை கண்டறிய சோனோகிராம் உள்ளிட்ட கருவிகள் தற்போது மருத்துமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வயர்களும், டிஜிட்டல் திரைகளும், அதன் ஒலியையும் பார்த்தாலே, கேட்டாலே நன்றாக இருப்பவர்களுக்கும் இதயம் சரியில்லையோ என்று அச்சப்பட வைக்கும் மிகப் பெரியதாக இருக்கும். போதாதென்று அவற்றை கையாள தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அல்லது தனி லேப்கள் என அதை விவரித்துக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா என்று ஏங்குபவர்களுக்காகவே வந்து விட்டது கையடக்க சோனோகிராம் கருவி. அதன் பெயர் கேப்ஷன் ஏஐ. ஆண்டுதோறும் இதய நோயால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இனி இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பதால் மாரடைப்புக்கு குட்பை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago