முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய யுக்தி

சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.

விண்வெளியிலும்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நினைவாற்றலை அதிகரிக்க

மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் எனவும் சிந்தனைத் திறனை மேம்படுகிறதாம்.மேலும், அவர்களின் மூளை ஐந்து வயது இளமையாகி விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக 60 சதவீதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு 63 நிமிடங்கள் தூங்குகிறார்களாம்.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago