முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதன்முதலாக பேஷன் இதழ் எப்போது வந்தது தெரியுமா?

இன்றைக்கு பேஷன் உலகம் பெருகிவிட்டதை போலே அதற்கான இதழ்களும் உலகம் முழுவதும் ஏராளமாக வருகின்றன. அது ஒரு தனி துறையாகவே உருவெடுத்து வளர்ந்து நிற்கிறது. அதே வேளையில் முதன்முதலாக பேஷனுக்கென இதழ் எப்போது வந்தது தெரியுமா 1586 இல் Josse Amman என்ற சுவிஸ் ஓவியரால், Gynasceum, sive Theatrum Mulierum என்ற பெயரில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இந்த இதழின் பொருள் பெண்ணின் அரங்கு என்பதாகும். இது பெண்களின் ஆடைகளை என்கிரேவிங் முறையில் அச்சடித்து அன்றைய பேஷன் குறித்து பேசு பொருளாக்கியது.

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். 

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

வாழ்நாளை கூட்ட...

நாம், பயம் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால் நம் மூளை போர்கால அடிப்படையில் வேலை செய்யும். தொடர்ந்து பயந்து கொண்டே இருந்தால்,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும், இருதய பாதிப்பு, குடல் பாதிப்பு, முதுமை கூடும். மேலும், சிறிய வயதிலேயே இறப்பு ஏற்படும். எனவே பயத்தை தவிர்த்து, தைரியமாய் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

பறக்கும் பைக்

ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இது, மின்சாரம் மூலம் இயங்குகிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும்.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony