முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எர்த் என எப்படி பெயர் வந்தது

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர். அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி என்று இதன் பொருளாகும். தமிழில் மட்டும் பூமிக்கு 62 சொற்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  பூமிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் "எர்த்" என்ற பெயர் ஆயிரம் ஆண்டு பழமையானது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பூமியைத் தவிர்த்த மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. அதேநேரம் பூமிக்கு "எர்த்" என்ற பழைய ஆங்கிலா சாக்ஸன் மொழியால் ஆன பெயர் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha ) என்றும், ஜெர்மனில் எர்டே (erde) என்றும் குறிக்கப்படுகிறது.

பையோனிக் தோல்

இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களைப் போன்றே உணர்வுகள் கொண்ட ரோபோக்களை கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ரோபோக்களின் கை, கால்களில் மனிதனை போன்று தொடு உணர்ச்சியை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3டி அச்சிடப்பட்ட தொடுதிரை சென்சார்களை பயன்படுத்தி, 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பியோனிக் தோலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ரோபோக்களுக்கு தொடுதல் உணர்ச்சியை கொடுத்துள்ளனர், மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர். 4 அடுக்குகளை கொண்ட, 3D பிரின்டர் பயன்படுத்தி மின்னணு உணர்ச்சி கொண்ட ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில் உணர்வுகளுடன் சுயமாக சிந்திக்கும் திறனையும் ரோபோக்கள் பெற்று மனிதனின் மறு உருவமாக ஜொலிக்கும் என்பதே ஆராய்ச்சிகளின் கருத்து.

இங்கிலாந்துக்கு முதலிடம்

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர். இதில், இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. கனடா, இத்தாலியிலும் இதேநிலைதான்.

தெரியாத பகுதி

லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருள். பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா சென்றடைய வழி கண்டறியப்படாத காரணத்தாலும், கடல் வழி தெரியாததாலும் இப்பெயர் வைத்தனர். ஆஸ்திரேலிஸ் என்பது காலப்போக்கில் ஆஸ்திரேலியா என்றானது.

அறிவோம் சிறுநீரகம்

சிறுநீர் பாதையில் அழற்சி என்பது மருத்துவ துறையில் பொதுவாக காணப்படும் ஒரு குறியீடு. மூத்திரம் வரும் பாதையிலும், சில நேரம் மூத்திர பையிலும் அழற்சி ஏற்படலாம். இதற்கு சிஸ்டைடிஸ் என்று பெயர். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தை தாக்கும் போது அது செயலிழக்க வாய்ப்பு அதிகம்.

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்