முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புற்றுநோய் ஆபத்து

உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உதட்டுக்கு பூசப்படும் லிப்ஸ்டிக்கில் கிட்டத்தட்ட 33 ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இந்த ரசாயனங்கள் மிக எளிதாக நம் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளதால் புற்றுநோய் ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் டெக்ஸ்டைல் கழிவு எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் வாழும் தனிநபர் சுமார் 40 கிலோ எடையுள்ள டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 11 மில்லியன் டன் அளவுக்கு டெக்ஸ்டைல் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவை அனைத்தும் நிலத்தில் பரவி அதை விஷத்தன்மை உள்ளதாக ஆக்குகின்றன. காற்றில் பரவி காற்று மாசை ஏற்படுத்துகிறது. புவி வெப்பமயதாலுக்கு முதன்மை காரணி இது போன்று வெளியேற்றப்படும் கழிவுகள்தான் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சமோசா விற்க ...

மகாராஷ்டிராவை சேர்ந்த முனாப் கபாடியா, தனது தாயார் நபிசா செய்யும் மட்டன் சமோசா மற்றும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உணவகம் ஒன்றை மும்பையில் திறந்தார். தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

தேவைக்கு பயன்படுத்த

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. சன் ஸ்க்ரீன் வெயிலில் தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது.ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும். காயங்களில் இதை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும். உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயே சிறந்தது

சிக்னலிலேயே வாழ்நாளை கழிக்கும் மனிதன்

நகரத்தில் வாகனம் ஓட்டுவது நரகத்தை விட கொடுமையானது. அதிலும் போக்குவரத்து சிக்னலுக்காக நிற்கும்போது ஏற்படும் அழுத்தம் சொல்லி மாளாது. புதிய ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு மனிதரும் தனது  வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை சிக்னலில் காத்திருக்கும் போது செலவிடுவதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தில் 20 சதவீதம், அதாவது 75 விநாடிகளை சிவப்பு சிக்னலில் செலவாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்