முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஹேர் டை

தரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வருவதால்  அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகுகின்றன.

கடலின் பாதுகாவலன் பவளப்பாறைகள்:

கடலில் அரியவகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதேநேரம், கடல்பகுதியின் தட்ப வெட்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு.  பவளப் பாறைகளில் காணப்படும் பாலிப்ஸ் உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. இந்த பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். உலகின் ஒரு சில கடல் பகுதிகளிலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. இவை வளர கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்; இந்த பாலிப்ஸ் உயிரினம் சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து மகா சமுத்திரத்தில் மட்டும் 200 வகைகள் காணப்படுகின்றன. இவற்றை கடினமானவை, மிருதுவானவை என 2 ஆக பிரிக்கலாம். பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன.

புதிய வசதி

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு போட்டோ மட்டுமே இதுவரை அனுப்ப முடியும். ஆனால் தற்போது பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அப்டேட் ஆகியுள்ளது.

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்கள் தலைவன்

பல கி.மீ. தூரம் கிளைச்சாலைகள் வழியாக நடந்து பிரதான சாலைக்கு வந்தால் மட்டும் பேருந்துகளை பிடிக்கமுடியும் என்றிருந்த குக்கிராமங்களுக்கு முதன்முதலாக டவுன் பஸ்களை ஓடவிட்டவர் முறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony