முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சருமத்தின் வறட்சியை போக்க...

ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும். தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

கர்பிணிகள் அச்சம்

பியா...பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய்தான் டோகோபோபியா. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியனால் ஆபத்து

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது. உயிர்களை சுட்டு பொசுக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் சூரியனால்  பூமியின் அழிவு நிச்சயம். மேலும் புதன், வெள்ளி போன்ற கிரகங்கள் அழியும் ஆபத்தும் உள்ளதாம்.

மிதக்கும் தபால் நிலையம்

உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.  அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது.   உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தெரிந்தும் தெரியாதது

ஏப்ரம் மாதத்தின் முதல் நாளான முட்டாள்கள் நாளின் உண்மைக்காரணமாக வரலாற்றால் அறியப்படுவது நாட்காட்டி மாற்றம் தான். அதாவது கி.பி1582-ம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தான் முதல் மாதமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டது. கிர்கோரி என்ற போப் தான் தற்போதைய ஆங்கில நாட்காட்டியை உருவாக்கியவர். இந்த நாட்காட்டியைப் பலர் ஏற்றுகொண்டனர். சிலர் ஏற்கவில்லை. புதிய நாட்காட்டி முறைப்படி மாறியவர்கள் பழைய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடுவதை முட்டாள்கள் நாள் என நய்யாண்டி செய்ய ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் நாள் என்று கூறப்படக் காரணமாக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்